February 27, 2012

தக்ஷின் சித்ரா - 1


உரல் என்றால் என்ன? திரிகை என்றால் என்ன?என்று வியப்பாக கேட்கின்றனர் இளையதலைமுறையினர். பழமையின் அடையாளங்கள் மாறி,மறைந்து வருவது வருந்ததக்க உண்மை.பழமையான அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாத்து,மறைந்து வரும் இந்தக் காலத்தில் தக்ஷின் சித்ரா, சென்னையில் ஒரு பாரம்பரிய மையமாக,சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

பழமை வாய்ந்த வீடுகள்,பொருட்கள் என்று குவிந்து இருக்கும் தக்ஷின் சித்ராவில் தென்னிந்தியாவின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, தொழில் ஆகியவற்றை பழமை மாறாமல் அப்படியே பிரதிபலித்து பார்ப்பவர்களை வியப்பூட்டி பரவசம் அளிக்கின்றது.

அந்தக்காலத்திலேயே ஆக்கப்பூர்வமாக யோசித்து கலைநயமாக பிரமிக்க தக்க வகையில் நகாசு வேலையுடன்
அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களும் ,பொருட்களும் வியப்பை தருபவை.

நாட்டரசங்கோட்டை செட்டியார்கள் வீடு,அக்ரஹார வீடுகள்,விவசாயிகள் வீடு,குயவர்கள் வீடு,பாய் முடைபவர்கள் வீடு,கூடை முடைபவர்கள் வீடு,நெசவாளர்கள் வீடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா வீடுகள் என்று தத்ரூபமாக வீடுகள் அமைத்து பொருட்களையும்,உருவங்களையும் வைத்து நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்து செல்கின்றனர்.

தக்ஷின் சித்ராவில் எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு.


அக்ரஹாரத்து பிரமாணாள் இல்லம்.

நாட்டுக்கோட்டை செட்டியார் இல்லம்
காஞ்சிபுரம் நெசவாளர் வீடு
சாத்தனூர் வீடு
சாத்தனூர் வீடு இன்னொரு கோணம்.
மாயவரம் மாவட்ட விவசாயி வீடு


பாய் முடைபவர் வீடு
செங்கல்பட்டு குயவர் வீடு
கூடை முடைபவர் வீடு
சிரியன் கிருத்துவ வீடு.
சிரியன் கிருத்துவ வீடு இன்னொரு கோணம்
கேரளா கூடத்துக்குளம் இல்லம்
கேரளா கோலிக்கோடு இல்லம்.


பழமை வாய்ந்த இல்லங்களின் வெளிப்புறத்தொற்றத்தை படங்களில் பார்த்தோம்.அடுத்த இடுகையில் உட்புறத்தோற்றங்களைப்பார்ப்போம்.


41 comments:

Mahi said...

மீ தி ஃபர்ஸ்ட் ஸாதிகாக்கா? :))))))

Mahi said...

தஷிண் சித்ரா பற்றி எங்கோ படித்திருக்கேன். அழகான புகைப்படங்கள்! பகிர்வுக்கு நன்றி! சீக்கிரமா வீடுகளுக்குள்ளும் கூட்டிப்போங்க!:)

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. தொடரக் காத்திருக்கிறோம்.

Asiya Omar said...

படங்களிலேயே தஷின் சித்ராவை அறிய வைத்தமைக்கு பாராட்டுக்கள்.அருமை.
தொடர்ந்து பகிருங்க தோழி.எனக்கு பழமையான பொருட்களும் வீடுகளும் மிகவும் பிடிக்கும்.எப்பவுமே அழகு தான்.அவற்றை நாம் அனுபவிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.மதிப்பு தெரியாமல் பராமரிக்காமல் வீணடிப்பவர்கள் நினைவிற்கு வருகிறார்கள்.:(.

Yaathoramani.blogspot.com said...

அருமையான படங்கள் அருமையான பதிவு
தாங்கள் ரசித்ததை உடன் நாங்களும் ரசிக்கத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து...

Marc said...

வித்தியாசமான ஒர் அருமைப் பதிவு வாழ்த்துகள்

Kousalya Raj said...

அட மிகவும் அருமையாக இருக்கிறதே...! எத்தனை விதமான கலை படைப்புகள் என்றே எண்ண வைக்கிறது.

உள்புற அமைப்பையும் காண காத்திருக்கிறேன்.

Jaleela Kamal said...

ரொம்ப சூப்ப்ராக இருக்கு ஸாதிகா அக்கா \
என்க்கு இது போல் பழங்கால வீடுகள் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

அப்ப ஊருக்கு வந்தால் உங்கள தான் கூப்பிட்டு கொண்டு போவேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

பழங்கால வீடுகளின் அணிவகுப்பு அருமையோ அருமை.

ஸாதிகா said...

மகி நீங்கதான் பர்ஸ்ட்..கருத்துக்கு நன்றி மகி.

ஸாதிகா said...

விரைவில் மறு பதிவைப்போடுகிறேன் ராமலக்‌ஷ்மி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆசியா.அந்தக்கால வீடுகளைப்பார்க்கும் பொழுது சில நாட்கள் இங்கு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்ரு கற்பனை செய்து பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்லது.

ஸாதிகா said...

மிக்க நன்ரி ரமணிசார் கருத்திட்டமைக்கு.

ஸாதிகா said...

மிக்க நன்றி தனசேகரன்.

ஸாதிகா said...

எத்தனை விதமான கலை படைப்புகள் என்றே எண்ண வைக்கிறது.///உண்மைதான் கெளசல்யா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

அப்ப ஊருக்கு வந்தால் உங்கள தான் கூப்பிட்டு கொண்டு போவேன்//வாங்க ஜலி போகலாம்.இது ஆரம்பித்து பத்து வருட காலமானாலும் இதுதான் முதல் முறை.இவ்வளவு நாட்களாக மிஸ் பண்ணி விட்டோமே என்றுள்ளது.

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார்.

Angel said...

படங்களும் விளக்கமும் .மிக அருமை ஸாதிகா.
திருவான்மியூரில் தானே இந்த இடம் இருக்கு .கேள்விபட்டிருக்கேன்
அடுத்த முறை சென்று பார்க்கணும்

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ.. எங்கள் இலங்கை ஊர் வீட்டுக் கதவுகள் உங்கள் 1ம் படம் போலவே இருக்கும்.... ஒரு சின்னப்பிள்ளையால் அக்கதவை தள்ளித் திறக்க முடியாது அவ்வளவு பரம், அதுபோலவே கதவில் பற்றனும் செதுக்கப்பட்டிருக்கு.

2ம் படம்போலவே வலன்ஸ்போர்ட் இருக்கும் பின்னல் வேலைப்பாட்டோடு... சூப்பர்... அதன் அருமை அப்போ புரியவில்லை, இப்போ புரிகிறது.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆனா என்ன தான் இருந்தாலும் அந்தக் குயவர் வீடு, பாய் செய்பவர் வீடுபோல இடங்களில் இருக்கவேணும்போல ஆசையாக இருக்கு.

விச்சு said...

உட்புற அமைப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

vanathy said...

சூப்பர் படங்கள். இன்னும் பழமை மாறாமல் இருப்பது அழகு.

vanathy said...

அதீஸ் சொன்னது போல ஊரில் சாமியறை கதவு இப்படித் தான் இருக்கும் எங்கள் வீட்டில். இப்ப அருமை விளங்குது.

Menaga Sathia said...

இந்த இடத்தை இப்பதான் கேள்விபடுகிறேன்..பகிர்வுக்கு நன்றிக்கா!! அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்...

பால கணேஷ் said...

தக்ஷின் சித்ரா பத்தி இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன். எனக்கு செட்டி நாட்டு வீடுங்களோட அமைப்பு ரொம்பவே பிடிக்கும். படங்களுடன் தொடரும் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் வெய்ட்டிங் சிஸ்டர்!

Kanchana Radhakrishnan said...

படங்களும் பகிர்வும் அருமை.

ராஜி said...

இதுப்போண்ற ஒரு வீட்டைதான் கட்டனும்ன்னு எனக்கு ஆசை

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.திருவான்மியூரை தாண்டி போக வேண்டும் எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட்க்கு அருகில் உள்ளது.

ஸாதிகா said...

ஆனா என்ன தான் இருந்தாலும் அந்தக் குயவர் வீடு, பாய் செய்பவர் வீடுபோல இடங்களில் இருக்கவேணும்போல ஆசையாக இருக்கு.///

ஆஹா..என்ன ஆசை பூஸுக்கு.

ஸாதிகா said...

விரைவில் போடுகிறேன் உட்புற அமைப்புகளை விச்சு.

ஸாதிகா said...

பழமை மாறமல் மட்டுமல்ல அத்தனை சுத்தமாக பராமரிக்கவும் செய்கின்றனர்.நன்றி வானதி.

ஸாதிகா said...

அடுத்த முறை சென்னைக்கு வந்தால் சென்று வாருங்கள் மேனகா.நன்றி கருத்துக்கு.

ஸாதிகா said...

தக்ஷின் சித்ரா பத்தி இப்பத்தான் தெரிஞ்சுக்கறேன்.//

என்னண்ணே..சென்னையில் இருந்து கொண்டு கேள்விப்பட்டதில்லை என்று சொல்லுகின்றீர்கள்!ஒரு முறை மன்னியையையும் குழந்தைகளையும் அழைத்துப்போய் வாருங்கள்.கருத்துக்கு நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

மிக்க நன்றி காஞ்சனா ராதா கிருஷ்ணன்.

ஸாதிகா said...

இதுப்போண்ற ஒரு வீட்டைதான் கட்டனும்ன்னு எனக்கு ஆசை//
அடேங்கப்பா..சீக்கிரம் உங்கள் ஆசை நிறை வேறட்டும் ராஜி!கருத்துக்கு மிக்க நன்றி!

சி.பி.செந்தில்குமார் said...

படங்கள் அருமை

Minmini RS said...

அருமையான கலைநயமிக்க வீடுகள்.. இன்றும் சில ஊர்களில் பழைய காலத்து வீடுகளை காணலாம். எங்க ஊர்லயும் அந்த காலத்து அமைப்பில் வீடுகள் உள்ளன. ஒரு சிலர் மட்டுமே புது ட்ரண்ட்டு படி வீடுகள் கட்டியுள்ளனர்.

அருமையான படங்கள்.. நன்றி ஸாதிகா அக்கா.

ஸாதிகா said...

வருகைக்கு மிக்க நன்றி சி பி செந்தில்குமார்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மின்மினி.

வெங்கட் நாகராஜ் said...

தக்ஷின் சித்ரா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது உங்கள் படங்கள் மூலம் கண்டேன்... நல்ல பகிர்வு... பாரம்பரியமான கலைகள் காக்கப்படவேண்டியவை.... இது போன்ற இடங்கள் இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும்....

தொடருங்கள்...

arul said...

dakshin chitra is a very nice place